தமிழ் சங்கம் – 3

இப்போது நாம் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் அறிவர். உலக மொழிகளிலே தமிழ்தான் பழமையான மொழி என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழ் வரலாற்றிலே 15,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்சங்கம் இருந்ததென வரலாறு கூறுகிறது. இப்போது இருக்கும் தமிழ் நாடானது முன்பு தமிழ் நாட்டின் ஒரு பகுதியே ஆகும்.
திராவிட நாடு என்று சொல்லும்போது தென் இந்தியாவைக் குறிக்கும். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் இது தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதாவது, ஆந்திரம், கன்னடம், கேரளம் மற்றும் தமிழகம் என்று பிரிக்கப்பட்டது. அது திராவிட நாகரீகம் என்று கூறப்படுகிறது.
திராவிட நாகரிகம் தெற்கே இருந்து உலகெங்கும் பரவியதேயழிய வடக்குப் பகுதியிலிருந்து இந்தியாவின் தென் பகுதிக்கு வரவில்லை.
தமிழகத்துக்குத் தெற்கே காணப்படும் இந்து மகா சமுத்திரம் முன்பு மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. அது வடக்கே விந்திய மலை வரையிலும் விரிந்திருந்தது. அதன் பெயர் ‘லெமூரியா’ என்றும் ‘குமரி கண்டம்’ என்றும் அழைக்கப்பட்டது.
மற்றும் ‘சாலிதியா’ அல்லது கல்தேயர் நாடு அல்லது சீனார் நாடு என்றும் கூறுவர்.
உலகிலே முதன் முதலில் மக்கள் பேசிய மொழி தமிழ்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நான்கு வேதங்கள், மற்றும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னே முதுமொழியாகிய தமிழ் மொழி இருந்ததென்று மனோன்மணியத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி அநேக உதாரணங்களைக் கூறலாம்.
உலக முழுவதிலும் பாண்டிய நாட்டினரே மிகப் பழமையானவர்கள் என்றும் தென் மதுரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கமே எல்லா சங்கங்களுக்கும் முற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இதைப்பற்றி முழு விவரங்கள் அறிய விரும்புவர்கள் ‘தமிழகம்’ மற்றும் ‘தமிழ் இந்தியா’ என்ற நூல்களை தென் இந்தியா சைவ சித்தாந்த நூற்பதிவு கழகம், திருநெல்வேலி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
லெமூரியா கண்டம் நீரில் மூழ்கியபோது அநேக நூல்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. ஆகையால் தமிழகத்தின் வரலாறுகள் அறியப்படவில்லை. அவர்கள் சைவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அது மாத்திரமல்ல, விநாயகர், முருகன், சிவன் போன்றோர் அக்காலத்து சங்கத்தின் அங்கத்தினர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
அர்ச்சுனன், அஸ்வத்தாமன், இராமன், சிங்கன், சூரன், தாரகன், காசீபன் முதலானோர் சிவ பக்தர்கள் என கூறப்படுகின்றது. இதன் விவரம் திருவாசகத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுவுமன்றி கலித்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் காணப்படும் கடவுள் வாழ்த்துக்களை காண்போமானால் சிவ வழிபாடுதான் தென் நாட்டில் வியாபித்திருந்தது என்பது வெளிச்சமாகிறது.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அடிப்படையில் இந்த வழிபாடுகள்தான் தென் நாட்டில் நடைபெற்று வந்தன.
திருமந்திரம், திருவாசகம், தேவாரம் (சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கு) ஆகியவற்றில் காணப்படுகின்ற கோட்பாடுகளே தமிழின் சமயக் கோட்பாடுகளாகும்.
லிங்க வழிபாடுகளும் இங்குதான் காணப்பெறுகின்றது (உதாரணம்) பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் ஆகும்.
வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள், கொண்டு வந்த கொள்கைகள் பிற்காலத்தில் தமிழகத்தில் கலந்து விட்டது.
இந்த ஆரியர்கள்தான் சிதறடிக்கப்பட்டு வடக்கிலிருந்து இந்தியாவுக்கு வந்த ‘யூதர்கள்’ என்றும் கூறலாம்.
கடவுளால் சிதறடிக்கப்பட்ட யூத மக்களின் பிறப்பிடம் இதே கல்தேயா நாடுதான் என்று கூறப்படுகிறது.
அவர்களுடைய மூதாதையர் அபிராம் என்பவர் இங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர்.
இதுவுமின்றி எபிரெய அரசன் சாலொமோன் என்பவன் தென் இந்தியாவில் இருந்து ஒப்பீர் என்ற உவரி துறைமுகத்தின் வழியாக ஹீ-ராம் என்ற அரசன் துணை கொண்டு தேக்கு, யானைத் தந்தம், மயில், குரங்கு, நவமணிகள் போன்றவைகளை இறக்குமதி செய்தான் என்று வரலாறுகள் கூறுகின்றன.
மற்றும் தமிழர்கள் சுமித்ரா, ஜாவா, மலேயா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் குடியேறி ‘மாயன்’ என்ற கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் மற்றும் விஞ்ஞான அறிவு பெற்றவர்கள் என்றும் அறியப்படுகிறது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினொன்கீழ்க்கணக்கு, சங்கக் காலத்துக்குப் பிற்பட்ட நூல்கள் ஆகும். தற்போதைய கடைச்சங்க காலத்திய நூல்களில் வழங்கப்படும் புலவர்களின் பெயர்கள் கிட்டதட்ட ஐநூற்றுவர் என கூறப்படுகிறது. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், திருக்குறள் போன்றவை இக்கடைச் சங்க காலத்து நூல்களாகும்.
அந்தணர்களால் கூறப்படும் ‘மேரு மலை’ வடக்கே இருக்கிறதென்று கூறி திசை திருப்பிவிட்டார்கள். அதுவுமல்லாமல் சிவபெருமான் இமயமலையில் குடியிருக்கிறார் என்றும் மக்களை திசை திருப்பிவிட்டனர். உண்மை அதுவல்ல, தெச்சணா பூமிதான் கடவுளின் ஆதி இருப்பிடமாகவே இருந்தது.
தேவாதிதேவர் கூட்டமே – அதில்
சேர்ந்திடும் புரோகிதர் கூட்டமே
வேதங்கள் நாடும் கூட்டமே – அந்த
தெச்சணத்தில் காணும் தெச்சணமே!
அகத்திய முனிவரும் தெச்சணமே – சில
அருந்தவ முனிவர்களும் தெச்சணமே!
புலத்தியர் மற்றவர் தெச்சணமே – கூடிப்
பூசிப்பர் தொழுவர் தெச்சணமே!
சித்தரும் போகரும் தெச்சணமே – இதில்
சிந்தனை செய்வோரும் தெச்சணமே!
முத்தரும் வந்திடும் தெச்சணமே – தென்
குமரியும் பொங்கிடும் தெச்சணமே!
சோழர் பாண்டியன் தெச்சணமே – ஆண்ட
சோபித மன்னரும் தெச்சணமே!
கோழையும் அடங்குவர் தெச்சணமே – புதுக்
கோதிலா புரியும் தெச்சணமே!
முத்துக் கிருஷ்ணரும் தெச்சணமே – பாலா
சீராம் லாறியும் தெச்சணமே!
பத்தாம் கல்கி அவதாரமே – அந்தப்
பதியும் கதியும் தெச்சணமே!
நிச்சயம் உணர்ந்தோர் அக்கணமே – நீதி
நியாயம் சத்தியம் லஹரியுமே!
அச்சமின்றியே உச்சரிக்க – மனு
ஜோதி ஆசிரமம் தெச்சணமே!
அவர்கள் கூறும் ‘மேரு’ மலையானது பூமத்தியரேகை அடுத்து உலகுக்கு மத்தியில் இருந்ததாகத் தெரிகிறது. அது லெமூரியா கண்டத்துக்குள் ஆழ்ந்துவிட்டது.
மீண்டும் ‘கோண்டுவாணா’ அல்லது ‘லெமூரியா’ கண்டம் வரப்போகும் சத்திய யுகத்தில் வெளிப்படும் என ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா மிக ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
அச்சமயம் மக்களின் பொய்யான ஆராய்ச்சி நூல்கள் எல்லாம் அழிக்கப்பட்டு சரித்திரம், பூகோளமே மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.
மேற்சொல்லப்பட்ட இரகசியங்களை மேல்நாட்டு மக்கள் இருட்டடித்து விட்டனர். ‘ராம்’ இந்த பெயரின் மறுபெயர்தான் ராமசேஸ், ரோம் என்று பிறநாடுகளில் பரவின.
இந்த திராவிட மொழியின் பெயர்கள் தற்போதைய ஈராக் என்று சொல்லப்படும் மொசப்பொத்தோமியா, ஈரான் தேசங்களில் காணப்படுகின்றன.
மேலை நாட்டினர் எகிப்திலிருந்துதான் நாகரீகம் தோன்றியது என்று சொல்லுகின்றார்கள். முந்தைய பாரத நாட்டின் பெயர்கூட எகிப்து என்று அழைக்கப்படுகின்றது. தற்போதைய எகிப்து அல்ல.
அதேபோல இந்தியா ‘கிழக்கு எத்தியோப்பியா’ என்றும் ஆப்பிரிக்கா ‘மேற்கு எத்தியோப்பியா’ என்றும் அழைக்கப்பட்டது.
அது தற்போதைய ஆப்பிரிக்காவைச் சார்ந்த சிறிய நாடாகிய எத்தியோப்பியா அல்ல.
இந்திய மக்களின் பழைய கற்காலம் கி.மு. முப்பதாயிரம் ஆண்டுகள் இருக்கலாம்  என டாக்டர் ஜி. தேரா என்பவர் கணக்கிட்டுள்ளார்.
இந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆறு ‘செம்பட்டியான் ஆறு’ என அழைக்கப்பட்டது.
கி.மு. நான்காயிரம் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, கிரேத்தா, சைப்ரஸ் நாடுவரை ஒரே இன மக்கள் வாழ்ந்தார்கள் என கூறப்படுகிறது.
கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆபிரகாம் என்பவரின் சந்ததியாராகிய யூத குலம் என்று சொல்லப்படும் ஆரிய மக்கள் வட இந்தியாவைக் கைப்பற்றினர்.
இவர்கள் தமிழ் மக்களிடையே விவாக கலப்பு செய்தனர் என்றும் கூறப்படுகிறது.
வசிஷ்டர், அகத்தியர், விஸ்வாமித்திரர் முதலியோர் தமிழ் மரபினர் ஆவர்.
பாரத போரில் கலந்துகொண்டவர் தமிழர் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் இராமர் வாழ்ந்து சண்டையிட்டதும் தமிழகே ஆகும்.
இப்படி அநேக காரியங்கள் நாளடைவில் மாறிவிட்டன, இருட்டடிப்பும் செய்யப்பட்டன.
ஆகவே இன்று காணும் தமிழகம், அன்றைய தமிழகம் அல்ல.
மற்றும் ‘அய்யா’ என்ற சொல் ‘யாவே’ என்று அழைக்கப்பட்ட பொதுப் பெயராகும்.
ஆகவேதான் நமது தமிழ்நாட்டில் அநேகரை இராசையா, இராமையா, சுப்பையா, கந்தையா, கருப்பையா, வெள்ளையா, பாலையா, தங்கையா, முருகையா, பொன்னையா என்று அழைக்கிறார்கள்.
‘உபநிடதங்கள்’ தமிழர்கள் பண்டைய மறைகள் என்று கூறப்படுகின்றது.
‘உபநிடத ஞானம்’ அக்காலத்திலே தமிழக அரசர்களிடம் மாத்திரமின்றி பெண்களிடமும், மற்ற குலத்தவரிடமும் இருந்தது.
அந்த ஞானமானது பிராமணர்களுக்கு மாத்திரம் உரியதல்ல.
அரச குலத்தவரே உயர்ந்த ‘உபநிடத’ ஞானத்தைப் பெற்றிருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. உதாரணம் சாலொமோன் அரசன் ஒரு சிறந்த ஞானி, அவரிடமிருந்தே பிராமணர்கள் என்ற லேவியர்கள் அறிவைப் பெற்றனர் என்று உபநிடதங்கள் கூறுகின்றன.
இந்த இரகசியங்கள் தகுதியில்லாதவர்களுக்கு அளித்தல் கூடாது என்று உபநிடதங்கள் கூறுகின்றது. தந்தை தன் மூத்த புதல்வனுக்கு இந்த ஞானத்தை அளிக்கலாம்.
மற்றும் பிராமணர்கள் சொல்லும் ‘லா’ என்ற வார்த்தையும் மற்றும் ‘ஓம்’ ஆகிய எகர, ஒகரங்கள் தமிழ் மொழியிலே இருக்கின்றதேயழிய வடமொழியில் கிடையாது.
‘அல்லா’ என்று சொல்லும் ‘லா’ என்னும் தமிழ் சொல்லின் திரிபேயாகும்.
‘ஏலோஹீம்’ என்னும் எபிரெயசொல் ‘எல்’ என்ற தமிழ்ச் சொல்லில் வந்ததாகும். ‘எல்ஏலோஹீம்’, ‘எல்ஷடைய்’ என்னும் எபிரெய பெயர்கள் கடவுளுடைய சிறப்பு பெயராக வழங்கும் ‘சடையன்’ என்னும் சொல்லாகும்.
தற்போதைய அராபிய கடல் முன்பு குறுகியதாய் இருந்தது. இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது என்று தெரிய வருகிறது.
இக்காலத்து தமிழுக்கும் முந்தைய காலத்து தமிழுக்கும் அநேக வேறுபாடுகள் உண்டு.
‘இலாவிருதம்’ என்பது ‘லா’ என்ற கடவுளை வணங்கிய விருதம் நாட்டைக் குறிக்கும் ‘ஈழம்’ என்ற ‘ஈழத் தமிழ்’ என்பதும் ‘எல்’ என்ற சொல்லின் திரிபு ஆகும்.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் இந்தியா முழுவதும் தமிழ் பாஷைதான் பேசப்பட்டது.
விவிலியத்தில் சொல்லப்பட்ட ‘அகாஸ்வேரு’ என்ற அரசன்தான் ‘நரகாசுரன்’ என்று மக்களால் திரித்து சொல்லப்படுகிறது.
இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிதான் எபிரெயர்கள் கொண்டாடும் ‘பூரிம்’ பண்டிகையாகும்.
‘சமஸ்கிருதம்’ வர ஆரம்பித்த பிறகுதான் தமிழ் மொழி தெற்கே ஒதுக்கப்பட்டது.
தமிழ்சங்கம் என்பது மூவகைப்பட்ட சங்கமாகும் – இச்சங்கமான தலைச்சங்கம், இடைச்சங்கம்,கடைச்சங்கம் என பிரிக்கப்பட்டுள்ளது.
தலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் 549 பேர் என்று கூறப்பட்டுள்ளது.
இடைச்சங்கத்தின் உறுப்பினர்கள் 59 பேர் என்று கூறப்பட்டுள்ளது.
கடைச்சங்கத்தின் உறுப்பினர்கள் 49 பேர் என்று கூறப்பட்டுள்ளது.
‘மொகஞ்சதாரோ’ தமிழர் நாகரீகம் மேற்கு ஆசிய மக்கள் நாகரீகத்தைவிட உயர்ந்தது என்று கூறப்படுகிறது.
புராணங்களில் உண்மையிருப்பினும் அதன் கற்பனை கதைகளுக்கு பொறுப்பு. பிராணமர்கள்தான், தமிழர்கள் அல்ல. கற்பனைகளை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் ஆவர்.
கிறிஸ்தவர்கள் இந்த உலகம் தோன்றி 6,000 ஆண்டுகள்தான் ஆகிறது என்று அப்பட்டமான பொய் சொல்லுகிறார்கள்.
இடைச்சங்கம் தாமிரபரணி ஆற்று முகத்துவராத்தில் உள்ள கபாடபுரத்தில் இருந்தது என இராமாணயத்தில் கூறப்பட்டுள்ளது.
‘தொல்காப்பியம்’ என்ற நூல் பழமையை காப்பதாகிய நூல் என்பதால் அந்நூலுக்கு ‘தொல்காப்பியம்’ என்ற பெயர் வழங்கியது.
நாள்பட நாள்பட மக்கள் தமிழை இழிவுபடுத்தும் கொடுமை வளர ஆரம்பித்தது.
மொழியை உயர்த்துவதற்காக, மொழியையோ அல்லது தமிழ் மக்களை உயர்த்திக் காட்டுவதற்காகவோ இந்த இணையதளம் ஏற்படுத்தப்படவில்லை.
ஆதியிலே பல இலட்ச ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீமந் நாராணயர் ஒரு வேள்வி நடத்தினார் என்பதை இருட்டடிக்கவே தமிழ் கலாச்சாரத்தையும் அதன் நூல்களையும் மக்கள் மறைத்தனர்.
திருவள்ளுவர் திருக்குறளில் முதல் கடவுள் வாழ்த்துப் பாடல்
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு” என்று பாடியுள்ளார் அந்த குறளில் ‘ஆதிபகவான்’ என்பதற்கு பதிலாக ‘ஆதி வேள்வி’ என்று இருந்திருக்க வேண்டும். மக்கள் அதை மாற்றிவிட்டார்கள்.
தமிழர் கலாச்சாரம் உலகிலே பழைய கலாச்சாரம் என்றும் இந்த உலகம் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவமைக்கப்பட்ட என்றும் அதில் மீந்த ஒரு பாகம்தான் ‘குமரி கண்டம்’ அல்லது ‘லெமூரியா கண்டம்’ என்பதாகும்.
அவைகள் நீரில் மூழ்கிவிட்டன. அதில் எஞ்சிய பகுதிதான் இன்றைய தமிழ் நாடு. இங்குதான் கடவுள் கடைசி அவதார புருஷராக அவதரிப்பார் என்று பல தீர்க்கதரிசிகள் கூறியிருக்கிறார்கள். அதில் முக்கிய தீர்க்கதரிசன புஸ்தகங்கள்தான் கன்னியாகுமரியைச் சார்ந்த முத்துக்குட்டி அவர்கள் எழுதிய அருள்நூல், அகிலத்திரட்டு என்ற நூல்கள் ஆகும்.
அதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ‘ஏழு யுகங்கள் ஏன்?’ என்ற புத்தகமாகும்.

வேண்டுவோர்:-
manujothi@sancharnet.in
மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.
* * *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *