வண்ணத்தமிழ் வாசல்
வண்ணத் தமிழ் வாசல் வளர்க! வாழ்க!
வண்ணத் தமிழ்வாசல்
உள்ளக்கோயில் திறக்கும்
எண்ணங்களாலே சிறக்கும்
எல்லோரையும் வரவேற்கும்
லஹரி கிருஷ்ணா அருள் தமிழே!
ஆன்மீகத்தின் இறை தமிழே!
எவரையும் மகிழ வைக்கும்
வண்ணத்தமிழ் வாசலே!
அன்றாடம் வழிபடவே!
ஞானஒளி தரும் தமிழே!
மென்மையின் மேன்மைகளை
முழங்கும் வண்ணத் தமிழ் வாசலே
ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
ஒற்றுமையில் ஒன்றாவோம்
நன்றே மிக்க தேவ ஆசீர்
நமக்கே திறந்தார் தமிழ் வாசல்!
அனைவரும் போற்றிடவே
அன்போடு இணைந்திடவே
வண்ணத் தமிழ் வாசல்
வாழ்க வளர்க என வாழ்த்துகின்றேன்.
ஞான ஒளி கவிச்சக்கரவர்த்தி குழுமம்
டாக்டர் சந்தோசம் அவர்கள்
சென்னை 41.