சட்டம்
சட்டம் என்பது ஒரு இருட்டறை என்று கூறப்படுகின்றது. தவறு செய்பவர்களுக்கு உலகில் சட்டம் தேவைப்படுகின்றது. கடவுளின் கட்டளைகளுக்கும் அவருடைய பிரமாணங்களுக்கும், விதிகளுக்கும் புறம்பாக செயல்படுபவர்களுக்கே சட்டம் தேவைப்படுகின்றது.
மனிதன் ஐந்தறிவு பெற்றவன். அவன் ஒரு இயந்திரமாக உருவாக்கப்படவில்லை. அவனுக்கே சிந்தனை செய்யும் ஆற்றலை கடவுள் அருளினார். அவன் தன் சுய விருப்பத்தின்படி செயல்பட அவனுக்குத் தருணம் கொடுத்தார். அதாவது அவர் கட்டுப்பாட்டுக்குள் வருவானா அல்லது மீறிச் செல்வானா என்பதுதான். உதாரணம் ஆதாம், ஏவாள் வாழ்க்கை வரலாற்றை பரிசுத்த விவிலியத்தில் படித்து அறிந்து கொள்ளலாம். வரலாற்றிலே பெண்கள் மூலமாக மனிதன் வீழ்ச்சியடைந்தான் என்று காண்கிறோம்.
1. ஒரு பெண் தேவ கட்டளையை மீறினாள்! – உலகில் பாவம் பிரவேசித்தது! – ஏவாள்
2. ஒரு பெண் அழுதாள்! – ஒரு குலமே அழிந்தது – சீதை
3. ஒரு பெண் நினைத்தாள்! – ஒரு குலமே அழிந்தது – இரேணுகை
4. ஒரு பெண் சிரித்தாள்! – ஒரு குலமே அழிந்தது! – பாஞ்சாலி
5. ஒரு பெண் சினந்தாள்! – ஒரு நகரமே எரிந்தது – கண்ணகி
6. ஒரு பெண் மகிழ்ந்தாள்! – அதர்மம் அழிந்தது! – தேவகி
தற்போது உலகில் வன்முறையும், தீவிரவாதமும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இது கலியுக முடிவின் அறிகுறியாகும். இதை மக்கள் அறியாது சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல் மந்திரியாக இருந்த காலத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இது மனித உரிமையைப் பறிப்பதல்லவா என்று கூறினர். இதனால் விளையும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
இந்தியாவில் ‘பொடா சட்டம்’ என்னும் சட்டம் ஒன்றும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பயன் என்ன? மனித உரிமைச் சட்டம் என்னும் ஒரு சட்டமும் வந்துள்ளது. அதன் பலன் என்ன? என்பவற்றை சில சட்ட நிபுணர்கள் சுருக்கமாகச் சொல்லுவதைப் படித்துப் பயன்பெறுவோம்.
மதமாற்ற தடை சட்டம் விளக்கம்:-
வழக்கறிஞர் எஸ். மீனாட்சிசுந்தரம் M.A., B.L., அவர்கள்
பொடா சட்டம் விளக்கம்:-
வழக்கறிஞர் அடைக்கலம் பர்னாந்து B.A., B.L., அவர்கள்
மனித உரிமை சட்டம் விளக்கம்:-
வழக்கறிஞர் D. மோகன் B.A., B.L., அவர்கள் மற்றும் பலர் புதிய சட்டங்களின் விளக்கங்களை இந்த இணைய தளத்தில் நீங்கள் காணலாம்.
* * *